Posts

Showing posts from July, 2024

அக்னிப்பூ

                                                                                               (காட்சி 1) பனிமலர் வேளை கனிமொழி ஒருவள் சிலையென நடந்தாள் சிற்றிடை சுமந்து சிற்றிடை மீது சிறுகுட மொன்று பற்றுடன் அங்குப் பாங்காய் அமர வளைகை யதனை வளைத்த தாங்கே. குறுநடை யிடையே குறுக்கிடும் ஆடை சறுசறு வென்று சத்தம் எழுப்பும். கால்வளை யோசை காலை வேளை இதயத் தோடு இன்னிசை பாடும். வண்டேறும் பூவை வட்டத் தலையில் கருநாகம் மூன்று கலந்தது போன்று கருமலை மீது கட்டியது போல நீண்ட கூந்தல் நெடுகப் பின்னி அங்கும் இங்கும் அலையென, மலைமேல் தாவித் தாவிக் குதித்தது நன்று. கடலிடை திரியும் மீனினைப் போல இடையிடை திரியும் இளைய மீனுக்கு மைவிழி யோரம் கருமை இட்டு உண்மை மீனாய் உருவம் காட்டி பொட்டிடை யோரம் படபட வென்று மின்ம...